இந்தியா

மின்னணு பொருள்களின் உற்பத்தியை பெருக்க ரூ. 48,000 கோடி திட்டம்

DIN

புது தில்லி: மின்னணு பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், அதன் கீழ் 3 திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த திட்டங்களின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டவும், 20 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்தியாவை மின்னணு மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தித் துறையில் பெரும் உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் 2 நீண்டகால கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, ரூ. 40,995 கோடி ஊக்கத்தொகையை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT