முகப்பு
இந்தியா

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 341 ஆக உயர்ந்தது!

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:15 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 332 ஆக இருந்த நிலையில் தற்போது 341 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் கரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.