இந்தியா

பஞ்சாப்: ஒரே நபரிடம் இருந்து 21 பேருக்கு கரோனா பாதிப்பு; கிராமத்துக்கு சீல்

DIN


பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 

இவர்களில் 21 பேருக்கு மார்ச் 18ம் தேதி கரோனா பாதித்து உயிரிழந்த நபரிடம் இருந்து கரோனா தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருத்வாராவின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர், இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மார்ச் 18ம் தேதி மரணம் அடைந்தார்.

அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, கோவிலில் பூஜை நடத்தி, அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், 70 வயது முதியவருடன் தொடர்பில் இருந்த ஜலந்தர் அருகே விர்க் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் குழந்தைக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப்பில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29. இவர்களில் 27 பேருக்கும் 70 வயது முதியவரிடம் இருந்தே கரோனா தொற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 21 பேரில் 14 பேர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள். குடும்ப உறுப்பினர்களில் 3 மகன்கள், ஒரு மருமகள், ஒரு மகள், 17 வயது பேத்தி, 3 கொள்ளுப்பேரன்களும் அடங்குவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT