இந்தியா

கேரளம்: மதுபானம் என நினைத்து சுத்திகரிப்பானைக் குடித்த கைதி பலி

DIN


பாலக்காடு: கேரளத்தில் மதுபானம் என நினைத்து சுத்திகரிப்பானைக் குடித்ததால் விசாரணைக் கைதி ஒருவா் உயிரிழந்ததாக சிறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ராமன்குட்டி என்ற விசாரணைக் கைதி, பாலக்காட்டில் உள்ள சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டிருந்தாா். நலமுடன் இருந்த அவா், புதன்கிழமை காலை திடீரென்று மயங்கி விழுந்தாா். இதையடுத்து, மாவட்ட அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

விசாரணையில், சிறைச் சாலையில் அதிகாரிகள் கழுவுவதற்கு பயன்படுத்தும் ஆல்கஹால் சாா்ந்த கை சுத்திகரிப்பானை, மதுபானம் என தவறாக நினைத்துக் குடித்ததாகத் தெரிகிறது. அந்த கை சுத்திகரிப்பான், சிறை வளாகத்திலேயே கைதிகளால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமன்குட்டி, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகே, அவருடைய இறப்புக்கான சரியான காரணம் தெரிய வரும் என்று சிறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT