இந்தியா

தில்லியில் மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி

DIN


புது தில்லி: புது தில்லியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிவதால், கரோனா பரவும் அபாயம் இருப்பதால் தில்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தில்லியில் உள்ள வர்த்தகக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை அனுமதிக்குமாறு காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்கும் நிறுவனங்கள் பணியாற்ற அனுமதிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் இயக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் கேஜரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT