sbi083121 
இந்தியா

கரோனா தடுப்புப் பணி: பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி நிதி

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி வழங்கியுள்ளது. 

DIN

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கரோனா தடுப்புப் பணிக்காக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் 'பிரதமர் நல நிதிக்கு' தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

பிரதமரின் இந்த கோரிக்கையினை ஏற்று தொழிலபதிபர்கள், நிறுவனங்கள் பல கரோனா தடுப்புப்பணிக்காக நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் தங்கள் இரண்டு நாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர். 

ஸ்டேட்  பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) சுமார் 2,56,000 ஊழியர்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு இரண்டு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தும் சேர்த்து ரூ.100 கோடி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT