பச்சை நிற மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்படுகிறது.
பச்சை மண்டலங்களில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டவற்றைத் தவிர மற்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம். ஒவ்வொரு பேருந்து டெப்போக்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.