முகப்பு
இந்தியா

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.160 குறைந்தது

சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று ரூ.160 குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 மே, 2020 at 12:46 PM
பகிர்:

புது தில்லி: சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று ரூ.160 குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் சமையல் எரிவாயு உருளை விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.160 குறைந்து ரூ.569.50க்கு விற்பனை செய்யப்படும்.

Advertisement

அதேபோல, தில்லியில் சமையல் எரிவாயு விலை ரூ.744ல் இருந்து 581.50க்கும், மும்பையில் ரூ.579க்கும், கொல்கத்தாவில் ரூ.584.50க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயு உருளையின் தேவை 20% அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.