முகப்பு
இந்தியா

பிகாரில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பிகாரில் 45 வயது நபர் கரோனாவுக்கு சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

பாட்னா: பிகாரில் 45 வயது நபர் கரோனாவுக்கு சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சீதாமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஏற்கெனவே, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதார முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார். 

புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் சமீபத்தில் மும்பைக்குச் சென்று கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சீதாமாரிக்கு திரும்பியதாகவும், அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.