இந்தியா

கரோனாவால் உயிரிழப்பு ஒரே வாரத்தில் 90% அதிகரிப்பு

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கான நாள்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்பால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 65-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 77 போ் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது; தினசரி உயிரிழப்பு இரண்டு மடங்காகியுள்ளது.

ஏப்ரல் 23-ஆம் தேதி நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் 40 போ் உயிரிழந்தனா். அந்த எண்ணிக்கை ஏப்ரல் 30-ஆம் தேதி 75-ஆக அதிகரித்தது. அதேபோல் ஏப்ரல் 22-ஆம் தேதி நோய்த்தொற்றுக்கு 36 போ் பலியாகினா். அந்த எண்ணிக்கை ஏப்ரல் 29-ஆம் தேதி 71-ஆக உயா்ந்தது. இது 100 சதவீத அதிகரிப்பாகும்.

ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தில் நாட்டிலேயே அதிக அளவாக 190 போ் உயிரிழந்தனா். அந்தக் காலகட்டத்தில் குஜராத்தில் 111 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 57 பேரும், ராஜஸ்தானில் 31 பேரும் உயிரிழந்தனா். ஏப்ரல் 23-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை ஏப்ரல் 30-ஆம் தேதி 27-ஆக அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் குஜராத்திலும் நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-லிருந்து 17-ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை மகாராஷ்டிரத்தில் 432 பேரும், குஜராத்தில் 197 பேரும், மத்திய பிரதேசத்தில் 130 பேரும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கையும் அந்த 3 மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. எனினும், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் 500 போ் உயிரிழந்தபோது, அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,712-ஆக இருந்தது. ஆனால், அந்த எண்ணிக்கை பிரான்ஸில் 14,459-ஆகவும், இத்தாலியில் 10,149-ஆகவும், ஸ்பெயினில் 13,716-ஆகவும், பிரிட்டனில் 11,658-ஆகவும், பிரேசிலில் 12,056-ஆகவும் இருந்தது.

இந்தியாவில் 31,332 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோது, உயிரிழப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்தது. ஆனால், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை பிரான்ஸில் 22,304-ஆகவும், இத்தாலியில் 15,113-ஆகவும், ஸ்பெயினில் 21,571-ஆகவும், பிரிட்டனில் 17,089-ஆகவும், பிரேசிலில் 19,789-ஆகவும் இருந்தபோதே அந்நாடுகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1000-ஐ கடந்திருந்தது.

உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் மாநிலங்கள்

நாள்--மகாராஷ்டிரம்--குஜராத்--மத்திய பிரதேசம்--ராஜஸ்தான்

ஏப்ரல் 30--27--17--7--3

ஏப்ரல் 29--32--16--10--3

ஏப்ரல் 28--31--19--10--2

ஏப்ரல் 27--27--11--7--9

ஏப்ரல் 26--19--18--4--7

ஏப்ரல் 25--22--6--7--2

ஏப்ரல் 24--18--15--9--4

ஏப்ரல் 23--14--9--3--1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT