முகப்பு
இந்தியா

காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர். 

இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஹந்த்வாராவில் உயிரைத் தியாகம் செய்த தைரியமான நமது பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி. அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தனர். குடிமக்களைப் பாதுகாக்க அயராது உழைத்தனர். அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →