இந்தியா

தில்லியிலும் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது!

DIN

தமிழகத்தைத் தொடர்ந்து தில்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதுமே ஊரடங்கு அமல் காரணமாக அனைத்துத்துறை சார்ந்த தொழில்களும் முடங்கியுள்ளன. அரசுக்கும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து தில்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் வருவாயை கருத்தில் கொண்டு, பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 27% லிருந்து 30% ஆகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 16.75% லிருந்து 30% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 67 காசுகளும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் 10 காசுகளும் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT