எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 85 வீரர்களுக்கு தொற்று உறுதியானது
தில்லியில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 85 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 85 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 69 வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து இன்று மேலும் 85 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 பேர் திரிபுராவைச் சேர்ந்தவர்கள். இதில் 60க்கும் மேற்பட்டோர் தில்லியில் காவல்துறையுடன் இணைந்து சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.