சிக்கிமில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
சிக்கிம் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
சிக்கிம் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ராணுவ ஹெலிகாப்டர் சிக்கிம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
இதில் 6 பேர் பயணித்த நிலையில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாவும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.