இந்தியா

ஆந்திரத்தில் பேருந்துகளில் இருக்கை அமைப்பு மாற்றம்

எம். ஆர். சுரேஷ்குமார்


திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் இன்னும் ஒரு வாரத்தில் சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட உள்ளது. அதனால் மாநிலப் போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை சமூக இடைவெளியுடன் இயக்கத் தயாராகி வருகிறது. அதன்படி, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள இருக்கைகளும் அதற்கேற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தொலைதூர விரைவுப் பேருந்துகள் முதல், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வரை இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு பக்கம் 3 வரிசை, மற்றொரு பக்கம் 2 வரிசை என இருந்த இருக்கைகள் முன்புறம், பின்புறம், இடையில் என 1 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளும் முகத்திற்கு கவசம் அணிதல், கையில் கையுறை அணிதல், தங்களுக்கு தேவையான போர்வைகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தாங்களே கொண்டு வருதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் விரைவு பேருந்துகளின் முன்பதிவும் தொடங்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT