இந்தியா

ஊழியருக்கு கரோனா: ஏர் இந்தியா தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

PTI


புது தில்லி: ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் முழுவதும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பூட்டப்பட்டிருக்கும் என்றும், அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு திங்கள்கிழமை மாலை கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து தலைமை அலுவலகம் பூட்டில் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரே விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. இதுவரை மே 7 முதல் 14 வரை 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT