இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 70,756-ஆக உயர்வு

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாள்களுக்கு மேலாகியும் கரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை 2,206-லிருந்து 2,293-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917-லிருந்து 22,455-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3604 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 87 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக 23,401 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT