முகப்பு
இந்தியா

ஒடிசாவில் இரட்டிப்பு கட்டணத்துடன் பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை

ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், ஆனால் இரட்டிப்புக் கட்டணத்துடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே, 2020 at 2:39 PM
பகிர்:


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், ஆனால் இரட்டிப்புக் கட்டணத்துடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாப் பெஹேரா இது குறித்துக் கூறுகையில், பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கவும், இரட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரைகளுக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வரை இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.