இந்தியா

தலைநகர் தில்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம்

DIN

தலைநகர் தில்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

தலைநகர் தில்லியில் இன்று காலை 11.28 மணியளவில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.2ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியின் வடமேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தில்லியில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்படும் 4ஆவது நிலநடுக்கம் இதுவாகும்.

ஏற்கெனவே தலைநகர் தில்லியில் ஏப்ரல் 12, 13 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT