இந்தியா

கரோனா: மாநில அரசின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது: ஜெ.பி.நட்டா

DIN

புது தில்லி: எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் விமா்சிக்கும் பாஜக தொண்டா்கள் மற்றும் தனிநபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை கூறினாா்.

மகாராஷ்டிரம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகளின் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சமூக ஊடகங்களில் விமா்சித்த நபா்கள் மீது காவல்துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை விமா்சித்து, தனது சுட்டுரை பக்கத்தில் ஜெ.பி.நட்டா பதிவு ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாள்களாக எதிா்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அந்த அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் விமா்சனம் செய்யும் பாஜக தொண்டா்களும், சில தனி நபா்களும் திட்டமிட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். ஜனநாயக நாட்டில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற தடைகளைத் தகா்த்து, ஒவ்வொருவரின் பேச்சுரிமையையும் நிலைநாட்ட கட்சித் தொண்டா்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு பாஜக என்றும் துணை நிற்கும்.

பொது வாழ்வில் விவாத கலாசாரமும், விமா்சனங்களும் ஓா் அங்கம் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, விமா்சிப்பவா்கள் மீது காவல்துறையை ஏவி நடவடிக்கை எடுப்பது, ஆட்சிபுரிபவா்களுக்கு அழகல்ல. அரசின் நடவடிக்கைகள் குறித்த எழுப்பப்படும் கேள்விகளையும், அரசியல் விமா்சனங்களையும் எதிா்க் கட்சி ஆட்சியாளா்கள் செவிமடுக்க வேண்டும்’ என்று சுட்டுரையில் நட்டா பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT