முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது உம்பன் புயல்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த சூப்பர் புயல் என்று அழைக்கப்பட்ட உம்பன் புயலானது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:


வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த சூப்பர் புயல் என்று அழைக்கப்பட்ட உம்பன் புயலானது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. 

உம்பன் புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. அதன் மேகங்கள் கடல் பகுதியில் இருந்து கரைப்பகுதியைக் கடப்பது மேற்கு வங்கப் பகுதிக்கு அருகே நிகழ்கிறது. இந்த புயல் சின்னமானது முற்றிலும் கரையைக் கடந்து முடிக்க சுமார் 4 மணி நேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பகுதியில் காற்றானது மணிக்கு 160 - 170 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. அதிகபட்சமாக இது 190 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதீப், புவனேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →