இந்தியா

ஐதராபாத்தில் கரோனாவுக்கு 37 வயது காவலர் மரணம்

DIN

ஐதரபாத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவலர் மருத்துவமனையில் மரணமடைந்தார். 

தெலங்கானா மாநிலம், ஐதரபாத்தில் 37 வயது காவலருக்கு கடந்த 13ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையான காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு மரணமடைந்தனார். மறைந்த காவலருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கரோனாவால் மரணமடைந்த காவலருக்கு தெலங்கானா டிஜிபி மகேந்திர ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தெலங்கானாவில் புதன்கிழமை நிலவரப்படி 1661 பேரக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்களில் 5 காவலர்கள் அடங்குவர். மேலும் மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 40 பேர் பலியான நிலையில் 1,013 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT