இந்தியா

ஊரடங்கால் நாட்டில் கரோனா பாதிப்பு 14 - 29 லட்சத்தை எட்டுவது தவிர்ப்பு: மத்திய அரசு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் தொற்று பாதிப்பு 14 - 29 லட்சம் வரை எட்டுவது தவிர்க்கப்பட்டதாக நீதி ஆயோக் குழு உறுப்பினரும், கரோனா தடுப்பு மருத்துவ மேலாண்மைக் குழுவின் தலைவருமான வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 80 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், தில்லியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வி.கே. பால், நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், கரோனா பாதிப்பு 14 முதல் 29 லட்சத்தை எட்டியிருக்கும். சுமார் 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மே 21ம் தேதி இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பார்த்தால், கரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அதிலும் 60 சதவீதம் பேர் 5 நகரங்களைச் சேர்ந்தவர்கள், 90% நோயாளிகள் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும், 70% பேர் 10 நகரங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஊரடங்கு நடவடிக்கையால் கரோனா தொற்று மட்டுமல்ல, பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஊரடங்குக்கு முந்தைய நிலைமையும், பிந்தைய நிலைமையும் வெகுவாக மாறியுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதிப்பு விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. ஊரடங்கு நடவடிக்கையால், பெரிய அளவில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது, அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு வேளை ஊரடங்கு பிறப்பிக்கப்படாவிட்டால் கரோனா தொற்றின் எண்ணிக்கை மிக மோசமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT