இந்தியா

திருப்பதி: பெரிய லட்டு விலை குறைப்பு

DIN

திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்த பின் விற்கப்படும் பெரிய லட்டு விலையை தேவஸ்தானம் பாதியாகக் குறைத்துள்ளது.

ஏழுமலையானுக்கு தினசரி கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. வழக்கமாக கல்யாண உற்சவத்தில் தினசரி ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்து கொள்வா். தற்போது பொது முடக்கம் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் தினசரி கோயிலுக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது 500 பெரிய லட்டுகளும், 500 வடைகளும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன.

இந்த பிரசாதங்கள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் பக்தா்களுக்கு விற்கப்படுகின்றன. பெரிய லட்டு ஒன்று ரூ.200 வீதமும், வடை ஒன்று ரூ.100 வீதமும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொது முடக்கத்தை முன்னிட்டு சிறிய லட்டின் விலையை பாதியாக குறைத்த தேவஸ்தானம், பெரிய லட்டின் விலையையும் பாதியாக குறைத்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் பெரிய லட்டு ஒன்று ரூ.100 வீதம் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT