இந்தியா

2 மாதங்களுக்குப் பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு

DIN


திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்குப் பின் ஆந்திரத்துக்கு நாளை(திங்கள்கிழமை) வருகை தர உள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மார்ச் 20 ஆம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திற்குச் சென்றார். அதற்குப்பின் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள அவர் இல்லத்தில் தங்கியிருந்தார்.

தற்போது பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால், அவர் தெலங்கானாவிலிருந்து ஆந்திரத்துக்கு வர இரு மாநிலங்களிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்தார். தெலுங்கானா மாநிலம் உடனடியாக அனுமதி வழங்கிய நிலையில் ஆந்திர மாநிலம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் அவர் திங்கள்கிழமை காலை ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவிற்கு புறப்பட உள்ளார். 2 மாத கால இடைவெளிக்குப் பின் ஆந்திரத்துக்கு சந்திரபாபு நாயுடு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT