இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441லிருந்து 57,721ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 50,231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,635 பேர் பலியாகியுள்ள நிலையில் 14,600 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.