ஜார்க்கண்டில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
கொல்கத்தா சென்றுகொண்டிருந்த வாகனம் அதிகாலை 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 2-யில் உள்ள பாலத்தின் மீது வேகமாக மோதி, அருகில் உள்ள குடியா ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் இரண்டு வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கோவிந்த்பூர் காவல் நிலையில் பொறுப்பாளர் சுரேந்திர குமார் சிங் தெரிவித்தார்.
உயிரிழந்த நபர்கள் வைத்திருந்த ஆதார் அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் பிகாரின் கயா மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.