ஆக்ராவில் 864 பேருக்கு கரோனா பாதிப்பு
உத்தரப் பிரதேசத்தின், ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக பத்து வயத்திற்குள்பட்டவர்கள் தொடர்ந்து கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின், ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக தொடர்ந்து பத்து வயத்திற்குள்பட்டவர்கள் கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை மாலை வரை 7 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி மட்டும் 54 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை 7 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 87.27 சதவீதமாக உள்ளது.
Advertisement
இதுவரை இந்த மாவட்டத்தில் 12,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.