சிறையில் இருந்து மேலும் 900 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்த மூன்று நாள்கள் போர் நிறுத்தத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்து வருகிறது.
தற்போது மேலும் 4 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
Advertisement
முன்னதாக திங்கள்கிழமையன்று பக்ராம் சிறையில் இருந்து 100 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மிகப்பெரிய அளவில் சுமார் 900 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.