இந்தியா

வந்துவிட்டது முகத்தைக் காட்டும் முகக்கவசம்: புகைப்படக் கலைஞரின் புதிய யோசனை

DIN


கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ள முகக்கவசத்தை அணிந்து கொண்டாலும், அதனால் சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் நாம் யார் என்றே எதிரில் வருவோருக்குத் தெரியாமல் போவது.

இதில் சிலருக்கு நல்லது இருந்தாலும், அது எப்படிங்க, தெரிந்த நபரை எதிரில் சந்திக்கும் போது அடையாளம் தெரியாமல் கடந்து செல்வது நல்லதாக இருக்கும்.

அதனால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது புகைப்படம் அச்சிடப்பட்ட அழகிய முகக்கவசங்கள். இது அணிந்திருப்பவரின் முகத்தை மறைக்கும், ஆனால் மறைக்காது.

எப்படி? புகைப்படக் கலைஞர்கள், ஒருவரை புகைப்படம் எடுத்து, அவரது மூக்கு, வாய் பகுதிகளை பிரிண்ட் செய்து அதனை முகக்கவசத்தில் அச்சிட்டுக் கொடுத்துவிடுவார். பிறகு அதனை அதற்குரியவர் அணிந்து வெளியே சென்றால், முகக்கவசம் முகத்தை மறைத்து கரோனாவில் இருந்து காக்கும். அதே சமயம் அச்சிடப்பட்ட முகக்கவசம் என்பதால் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து விடும்.

இதுபோன்ற முகம் பொருத்தப்பட்ட முகக்கவசங்கள்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துவிட்டன. 

உங்கள் பகுதியில் கிடைக்கிறதா என்பதை விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உதவும். ஒரே குடும்பத்தில் பலரும் இதுபோன்று முகக்கவசங்களை அச்சிட்டு வைத்துக் கொள்ளும் போது, மாற்றி போட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT