முகப்பு
இந்தியா

ஹிமாச்சலில் கரோனா பாதிப்பு 290-ஐ எட்டியது: மேலும் 9 பேருக்குத் தொற்று

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 290-ஐ எட்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 29 மே, 2020 at 11:10 AM
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 290-ஐ எட்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிய வழக்குகளில், ஹமீர்பூரைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாவர். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் கடந்த மே 26 அன்று சேகரிக்கப்பட்டதாக ஹமீர்பூர் துணை ஆணையர் ஹரிகேஷ்மீன் தெரிவித்தார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா சாதகமாக உள்ளது. அவர்களில் மூன்று பேர் மகாராஷ்டிராவின் தாணேவிலிருந்து வந்தவர்கள் ஆவார். மேலும் ஒருவர் தில்லியில் திரும்பியதாக காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் பிரஜாபதி தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.