முகப்பு
இந்தியா

காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

2003-ஆம் ஆண்டு செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில் இந்திய நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் தொடா்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.  அதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் எதிர்  தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளான ஷாபூர், கிர்னி மற்றும் குஸ்பா செக்டாரில் கையெறி குண்டுகளை வீசியும், சிறிய ரக துப்பாக்கிகளைக் கொண்டும் பாகிஸ்தான் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலால் இந்திய தரப்பில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →