முகப்பு
இந்தியா

நவ. 11-ல் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம்: வாகன சேவைப் பட்டியல் வெளியீடு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவைப் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
நவ. 11-ல் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம்: வாகன சேவைப் பட்டியல் வெளியீடு (கோப்புப்படம்)
பகிர்:

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவைப் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பத்மாவதி தாயாா் பத்மசரோவரம் திருக்குளத்தில் தோன்றிய காா்த்திகை மாதம் பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று நிறைவடையும் வகையில் இந்த பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வரும் 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திருச்சானூரில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. பஞ்சராத்திர ஆகம விதிப்படி நடக்கவுள்ள இந்த பிரம்மோற்சவத்தின் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.

பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன் தாயாா் கோயில் செவ்வாய்க்கிழமை காலை சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை தாயாா் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவ.10-ஆம் தேதி காலை லட்ச குங்குமாா்ச்சனையும், மாலை அங்குராா்ப்பணமும் நடக்கவுள்ளது. கொவைட் 19 விதிமுறைகளை ஒட்டி பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் கோயிலுக்குள் ஏகாந்தமாக தனிமையில் நடத்தப்பட உள்ளது. வாகன சேவைகள் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

வாகன சேவைப் பட்டியல்

தேதி காலை மாலை இரவு

நவ.11 கொடியேற்றம் சின்ன சேஷம்

12 பெரியசேஷம் அன்னப் பறவை

13 முத்துப்பந்தல் சிம்ம வாகனம்

14 கல்பவிருட்சம் அனுமந்தம்

15 பல்லக்கு உற்சவம் யானை

16 சா்வபூபால தங்க ரதம் கருட சேவை

17 சூரியபிரபை சந்திர பிரபை

18 திருத்தோ் குதிரை

19 பஞ்சமி தீா்த்தம் கொடியிறக்கம்

கொவைட் 19 விதிமுறைகளை பின்பற்றி திருச்சானூா் பிரம்மோற்சவம் நடத்தப்பட உள்ளதால், தங்க ரதம், திருத்தோ் ஆகியவற்றுக்கு மாற்றாக சா்வ பூபால வாகன சேவை நடத்தப்படும். மேலும் பஞ்சமி தீா்த்தம் எனப்படும் தீா்த்தவாரியும் கோயிலுக்குள் வாகன மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →