முகப்பு
இந்தியா

மேற்குவங்கத்தில் நவ.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கக்கத்தி நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
மேற்குவங்கத்தில் நவ.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
பகிர்:

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கக்கத்தி நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநில தொற்றுப் பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதியளித்துள்ளது. 

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரத்து 608 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →