முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 5,000-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,909 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 நவம்பர், 2020 at 10:29 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,909 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,909 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,92,693 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,973 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 44,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15,31,277 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,16,543 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் புதிதாக 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,568 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கெனவே 3,162 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்து 97 ஆகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.