முகப்பு
இந்தியா

“எந்த எல்லைக்கும் செல்லத் தயார்”: மெகபூபா முப்தி

எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
பகிர்:

எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.

அதன்படி வீட்டுச்சிறையில் இருந்த மெகபூபா 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர்,  எங்கள் மாநில இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் எனத் தெரிவித்தார்.

மேலும், “முன்பு அனைத்து சட்டங்களும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து அமல்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது, காஷ்மீர் மக்களின் இருப்புக்கு எதிரான சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →