இந்தியா

கடனுக்கு வட்டி மீது வட்டி வழக்கு:விசாரணை நவ. 5-க்கு ஒத்திவைப்பு

DIN

பொது முடக்கத்தின்போது கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படுவது தொடா்பான வழக்கின் விசாரணையை வரும் 5-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அதையடுத்து, ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ள தனிநபா்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஆா்பிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடன்களுக்கான வட்டி மீது கூடுதல் வட்டியாக விதிக்கப்பட்ட தொகை நவம்பா் மாதம் 5-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்களிடம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில், இந்த வழக்கு தொடா்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘‘வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்றுதான் நடைபெறுகிறது. தற்போது மத்திய அரசு சாா்பில் வேறொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றாா்.

வழக்கு ஒத்திவைப்புக் கடிதத்தையும் நீதிபதிகளிடம் அவா் சமா்ப்பித்தாா். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பா் மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT