முகப்பு
இந்தியா

ஆமதாபாத் கட்டட விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

ஆமதாபாத் கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பிரதமர் மோடி
பகிர்:

ஆமதாபாத் கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

குஜராத் ஆமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே உள்ள கிடங்கு ஒன்றில்  புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், மீட்கப்பட்ட 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

இந்நிலையில் ஆமதாபாத் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆமதாபாத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →