இந்தியா

அர்னாப் கோஸ்வாமி கைது: 'சட்டத்தை யாரும் மீறவில்லை'

DIN

மும்பை: அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டத்தை மீறி செயல்படவில்லை என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டட உற்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதற்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் யாரும் சட்டத்தை மீறவில்லை என்று கூறினார்.

மேலும், கட்டட வடிவமைப்பாளரின் மனைவி அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகிய பின்னரே வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT