முகப்பு
இந்தியா

இமாசல்-தில்லி: 8 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடக்கம்

இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையான இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

Updated On : 5 நவம்பர், 2020 at 4:06 PM
இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது (கோப்புப்படம்)
பகிர்:

இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையான இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பேருந்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

எனினும் தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதற்கேற்ப மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி தொற்று பரவல் குறைவாக உள்ள மாநிலங்கள் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியுள்ளன.

Advertisement

அந்தவகையில் இமாசலிலும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. கரோனா பரவும் விகிதத்திற்கேற்ப பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.  தில்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகமாக இருந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இமாசலில் இருந்து தில்லிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பயணி ஒருவர், ''கரோனா பரவலால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். தனியார் பேருந்துகளும் அதிக அளவில் கட்டணங்களை வசூலித்துவந்தன. இதனிடையே தற்போது தில்லிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

இது குறித்து பேசிய ஓட்டுநர் ஜியா லால், ''கரோனா பரவலுக்கு இடையே பேருந்துகளை இயக்குவது அச்சமளிக்கிறது. எனினும் பேருந்தை இயக்குவது எங்களது கடைமை. அதனை நாங்கள் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.