உ.பி.: விவசாயியைக் கொன்ற இருவர் கைது
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைத் தகராறில் விவசாயியைக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாஉ.பி.: விவசாயியைக் கொன்ற இருவர் கைது
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைத் தகராறில் விவசாயியைக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைத் தகராறில் விவசாயியைக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹுசைங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாபுகஞ்ச் என்ற பகுதியில் ஜெய்சிங் படேல் என்ற 45 வயது விவசாயி இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அமித் வர்மா, தினேஷ் படேல் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இருவரும் சேர்ந்து விவசாயி ஜெய்சிங் படேலைக் கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரும் விவசாயிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் ஜெய்சிங் உடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் இணைந்து அவரை கொலை செய்து அவரது விவசாய நிலத்தில் உடலை வீசியதாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.