உ.பி. விவசாயிகளுக்கான மின்கட்டணத்தில் முறைகேடு: பிரியங்கா குற்றாச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாஉ.பி. விவசாயிகளுக்கான மின்கட்டணத்தில் முறைகேடு: பிரியங்கா குற்றாச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கான மின் கட்டண முறைகேடு குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''முந்தைய ஆண்டுகளில் மின் கட்டணம் அதிகரிக்காத நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வீட்டு நுகர்வோர் மின் கட்டணம் 500 சதவிகிதமும், நகர்புற வீட்டு மின்சாரம் 84 சதவிகிதமும், விவசாயிகளுக்கான கட்டணம் 126 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின் அளவீட்டு மீட்டர்கள் வழக்கத்தை விட அதிக அளவு ஓடுவதாகவும், பூட்டிய வீடுகளில் கூட 7 முதல் 8 ஆயிரம் வரை மின் கட்டண ரசீது வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பல மாவட்டங்களில் உள்ள வீடுகளில் மின் மீட்டர்கள் இல்லமலேயே மின் கட்டண ரசீதுகள் வருவதாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம், கனமழை போன்ற இயற்கை சீற்றத்தில் விவசாயிகள் அரசாங்கத்தின் உதவியின்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், விவசாயப் பொருள்களுக்கான பெருநிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பை பெற்றுக்கொள்கின்றன.
இந்த நிலையில் விவசாயிகளுக்கான மின் கட்டணம் அதிகரித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மின் கட்டண மாற்றங்களை வீட்டு உபயோக நுகர்வோர்களும் அதிக நாட்களுக்கு பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
விவசாயிகளுக்கான மின் கட்டணத்தைப் பாதியாக குறைக்க வேண்டும். அதேபோன்று கைவினைக் கலைஞர்கள் மற்றும் குடிசைத் தொழிலாளர்களுக்கான மின் கட்டணத்திலும் சலுகை வழங்க வேண்டும்'' என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.