மலை மீது ஏறி செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் பலி
இந்தூர் நகருக்கு அருகேயுள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தூர் நகருக்கு அருகேயுள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள ஜாம் கேட் பகுதிக்கு நீது மகேஸ்வரி(30) தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்றபோது தவறி மலையின் மீதிருந்து பள்ளத்தாக்கில் விழுந்தார்.
நான்கு மணிநேர தேடலுக்குப் பிறகு உடலை பள்ளத்தாக்கில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். பின்னர் அவரது உடல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.