முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,959 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,959 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர், 2020 at 11:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,959 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 3,959 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,14,273 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,748 பேர் குணமடைந்துள்ளனர், 150 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 45,115 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

இதுவரை மொத்தம் 15,69,090 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 99,151 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 576 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 245 பேர் குணமடைந்துள்ளனர், 23 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,63,052 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,35,657 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 10,419 பேர் பலியாகியுள்ளனர். 16,262 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.