முகப்பு
இந்தியா

பிகார் 3-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 46 சதவிகிதம் வாக்குப்பதிவு

​பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:


பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகார் பேரவைத் தேர்தலுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மற்றும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 3-ம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 2.35 வாக்காளர்களில் 45.91 சதவிகிதத்தினர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சுபால் மாவட்டத்தில் 51.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் தர்பாங்காவில் 41.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரண்டாம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 44.51 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. முதற்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.29 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →