முகப்பு
இந்தியா

தொடர்ந்து 35 நாள்களாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோர் அதிகம்

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, புதிய தொற்று பாதிப்புகளை விடவும், புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போக்கு நிலவுகிறது.

Updated On : 7 நவம்பர், 2020 at 3:30 PM
தொடர்ந்து 35 நாள்களாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோர் அதிகம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

புது தில்லி : இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, புதிய தொற்று பாதிப்புகளை விடவும், புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போக்கு நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,356 ஆக இருக்கிறது. புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை 53,920 ஆக இருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களாக இந்த போக்கு தொடர்ந்து வருகிறது. இப்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.16 லட்சமாக இருக்கிறது.

கடந்த ஐந்து வாரங்களாக தினமும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தின் போது, ஒரு நாளைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 73,000-க்கும் அதிகமாக இருந்தது. இது இப்போது 46,000-ஆக குறைந்திருக்கிறது.

Advertisement

மேற்கூறிய போக்கால் தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காரணமாக இன்றைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,16,632 ஆக இருக்கிறது. மொத்த பாதிப்புகளுடன் உடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6.11 % மட்டுமே.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 78,19,886 ஆக இருக்கிறது. தேசிய குணம் அடைந்தோர் விகிதம் 92.41% ஆக இருக்கிறது. குணம் அடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு இடையேயான இடைவெளி இப்போது 73,03,254 ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.