முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 11.77 கோடி கரோனா பரிசோதனை

நாட்டில் இதுவரை 11.77 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 8 நவம்பர், 2020 at 11:34 AM
நாட்டில் இதுவரை 11.77 கோடி கரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

நாட்டில் இதுவரை 11.77 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தொற்று அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது. 

Advertisement

எனினும் ஒருசில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 11,94,487 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 11,77,36,791-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.