மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்: சிவராஜ் சிங்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
இந்தூர்: இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அரசு 19 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளகான், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளதால், நேரத்தை வீணடிக்காமல் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போதிய முயற்சிகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.
சாலை, மின்சாரம், குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரதம் (ஆத்மநிர்பார் பாரத்) என்ற இலக்கை அடையும் எங்கள் முயற்சி என்றும் கூறினார்.
முன்னதாக போபாலில் 'தன்னிறைவு பெற்ற மத்தியப்பிரதேசம் 2023' என்ற திட்டத்தை முதல்வர் செளகான் காணொலி தொடக்கி வைத்தார். இதில் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கலந்துகொண்டார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 25 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனா். 3 எம்எல்ஏக்கள் மரணமடைந்தனா். இதனால் 28 தொகுதிகள் காலியானதால் அந்த தொகுதிகளுக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெற்றது.