தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய எம்.எல்.ஏக்களை சந்தித்த நிதிஷ் குமார்
பிகார் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக கட்சி தலைமையகத்திற்கு முதல்வர் நிதிஷ்குமார் வருகை புரிந்தார்.
பாட்னா: பிகார் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக கட்சி தலைமையகத்திற்கு முதல்வர் நிதிஷ்குமார் வருகை புரிந்தார்.
அங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் சந்தித்தார்.
பிகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றது.
இதில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஜே.டி.யூ. கட்சியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாரே மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என்று பாஜக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 4-வது முறையாக பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக பாட்னாவிலுள்ள கட்சி தலைமையகத்திற்கு நிதிஷ் குமார் வருகைப் புரிந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கட்சித் தலைமையகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.
தேர்தலில் பாஜக மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிக்குப் பிறகு மூன்றாவது இடத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன் நிதிஷ் குமார் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.