முகப்பு
இந்தியா

தீபாவளி: தில்லி தீயணைப்புத்துறைக்கு 206 அவசர அழைப்புகள்

தில்லியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி 206 அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளது. கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும் தில்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
தீபாவளி: தில்லி தீயணைப்புத்துறைக்கு 206 அவசர அழைப்புகள் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையையொட்டி 206 அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளது. கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும் தில்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் கட்டுப்பாடுகளுடன் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒரு சில பகுதிகளில் தடையை மீறி பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதாக நேற்று மட்டும் 206 அழைப்புகள் வந்ததாக தில்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய தில்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க்,  ''தீபாவளிப் பண்டிகையொட்டி தில்லி தீயணைப்புத்துறைக்கு வந்த அழைப்புகளில் 4 அழைப்புகள் மிகப்பெரிய அளவிலான தீ விபத்துக்கானதாய் இருந்தது. தில்லியின் முன்ட்கா பகுதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எனினும் கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது'' என்று கூறினார்.

மேலும், ''மாலை 6 மணி முதல் 12 மணிவரை மீட்புப் பணிகளுக்காக 129 அழைப்புகள் வந்தன. எனினும் இது கடந்த ஆண்டு வந்த அழைப்புகளை விட குறைவு'' என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →